முக்கியச் செய்திகள் விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து: குரோஷியா அணியை வீழ்த்திய இங்கிலாந்து!

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் குரோஷியா அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

16-வது யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று மூன்று ஆட்டங்கள் நடைபெற்றன. லண்டனில் நடைபெற்ற ’டி’ பிரிவு போட்டியில் இங்கிலாந்து அணி, குரோஷியாவை எதிர்கொண்டது. முதல் பாதியில் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. ஆட்டத்தின் 57வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் ரஹீம் ஸ்டெர்லிங், முதல் கோலை அடித்தார். இதனால், இங்கிலாந்து அணி ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

ரோமானியாவின் புச்சாரெஸ்ட் நகரில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ‘சி’ பிரிவில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரியா, வடக்கு மாசிடோனியா அணிகள் மோதின. முதல் பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தன. 2வது பாதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரியா அணி மேலும் 2 கோல்கள் அடித்தது. இதனால் 3-க்கு 1 என்ற கோல் கணக்கில் அந்த அணி அபார வெற்றி பெற்றது.

ஆம்ஸ்டர்டாம் நகரில் நடைபெற்ற போட்டியில், நெதர்லாந்து அணி உக்ரைன் அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் 52-வது மற்றும் 58-வது நிமிடங்களில் நெதர்லாந்து அணி அடுத்தடுத்து 2 கோல்கள் அடித்தது. பதிலுக்கு உக்ரைன் அணியும் 2 கோல்கள் அடிக்க ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. போட்டி முடிய 5 நிமிடங்களே இருந்த நிலையில் நெதர்லாந்து அணி வீரர் டம்ஃப்ரைஸ் கோல் அடிக்க, அந்த அணி த்ரில் வெற்றி பெற்றது.

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இன்றும் 3 போட்டிகள் நடைபெறவுள்ளன.

இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கும் போட்டியில், ஸ்காட்லாந்து அணி, செக் குடியரசு அணியை எதிர்கொள்கிறது.

இரவு 9.30 மணிக்கு தொடங்கும் மற்றொரு போட்டியில், போலந்து, ஸ்லோவேகியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் போட்டியில், முன்னாள் சாம்பியன் ஸ்பெயின் அணி, ஸ்வீடன் அணியுடன் மோதுகிறது. ( gfx out )

Advertisement:

Related posts

ஜார்ஜ் ப்ளாயிட் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை; மரணத்திற்கு நீதி கேட்டு மக்கள் போராட்டம்

Saravana Kumar

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

Vandhana

நீதிபதி சஞ்சீப் பானர்ஜியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை!

Jeba Arul Robinson