கொரோனா இல்லாத வடகொரியா!

வட கொரியாவில் ஒருவருக்குக் கூட கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என உலக சுகாதார அமைப்பிடம் அந்நாட்டு அரசு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. வடகொரியாவில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அந்நாட்டின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இதனால்…

வட கொரியாவில் ஒருவருக்குக் கூட கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என உலக சுகாதார அமைப்பிடம் அந்நாட்டு அரசு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

வடகொரியாவில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அந்நாட்டின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் காரணமாக நாட்டில் உணவு பற்றாக்குறை நிலவுவதாக அதிபர் கிம் ஜாங் உன் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தங்கள் நாட்டில் ஒருவருக்குக்கூட கொரோனா பாதிப்பு உறுதியாகவில்லை என உலக சுகாதார அமைப்பிடம் வட கொரியா அறிக்கை சமர்ப்பித்துள்ளது. ஜூன் 10ம் தேதி வரை 30 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்குப் பரிசோதனை செய்யப்பட்டதில், ஒருவருக்கு கூட தொற்று உறுதி செய்யப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், வடகொரியாவில் ஜூன் 4 முதல் 10ம் தேதி வரை 733 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 149 பேருக்கு சளி, இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த சிலநாட்களுக்கு முன்பு அந்நாட்டின் தொழிற்சங்க மாநாட்டில் பேசிய அதிபர் கிம் ஜாங் உன், “நீண்டகால நோய்த் தொற்றான கொரோனா வைரசை கட்டுப்படுத்த அதிகாரிகள் கடுமையான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்தினர். மேலும் சுற்றுலாப் பணிகளுக்குத் தடை, எல்லைத் தாண்டிய போக்குவரத்து மற்றும் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தவேண்டும்” என அவர் கூறியுள்ளார்.

கிம் ஜாங் உன்னின் இந்த கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக அந்நாட்டில் பொருளாதார பாதிப்பு மற்றும் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இருந்தபோதிலும் கொரோனா நோய் பாதிப்பின் காரணமாக வடகொரிய அரசு தனது நாட்டு எல்லைகளைத் திறக்கத் தயாராக இல்லை என்பதை உணர்த்துகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.