வெற்றி என்பது திமுக அரசின் சாதனைக்கு கிடைத்த சான்றிதழ் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நேற்று புதுக்கோட்டை அரசு ராணியார் மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த 23 குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு நேற்று பிறந்த 23 குழந்தைகளுக்கு மோதிரங்களை வழங்கினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனைத் தொடர்ந்து மாவட்ட கழக அலுவலகத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி கொண்டாட்டம் நடைபெற்றது. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் திமுகவினர் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி என்பது திமுக அரசின் சாதனைக்கு கிடைத்த சான்றிதழ் என தெரிவித்தார். அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழக்க வேண்டும் என்று தமிழக முதல்வர்
பரப்புரையின் போது தெரிவித்தார். அவர் சொன்னது தற்போது நடந்துள்ளது.
எதிர்க்கட்சிகள் தேர்தலுக்கு தேர்தல் விமர்சனங்களை வைப்பது சகஜம். அவற்றையெல்லாம் கடந்து திமுகவின் பரப்புரை மக்களிடம் ஈடுபட்டுள்ளது என்று கூறிய அவர், அதிமுகவின் நிலை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தது பேசினார். அப்போது அதிமுக கூட்டணி கட்சி பாஜகவிற்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்த கட்சி தான். பாஜக தான் தேர்தலில் யார் நிற்க வேண்டும் என்பது குறித்து தேர்ந்தெடுத்தது. அதனால் அதைப்பற்றி கூறுவதற்கு எதுவும் இல்லை என்று கூறினார்.
தொடர்ந்து ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி குறித்து பேசிய அவர், ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி வரும் பாராளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும். அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று சபதத்தை தான் நேற்று தமிழக முதல்வர் எடுத்துள்ளார். மத்திய அரசு சமையல் எரிவாயு விலையை எப்பொழுதும் உயர்த்திக் கொண்டு செல்வது வழக்கம்தான். சாதாரண மக்கள் வாங்க முடியாத அளவிற்கு சமையல் எரிவாயு விலையை உயர்த்தி கொண்டே போகிறார்கள். கச்சா எண்ணெய் விலை என்பது குறைந்து கொண்டுதான் வருகிறது. ஆனால் விலை ஏற்றத்தை மட்டும் மத்திய அரசு நிறுத்தவே இல்லை. மத்திய அரசு எப்படியெல்லாம் மக்களிடம் கொள்ளை அடிக்கிறது என்பதற்கு இது ஒன்றே சான்று என்று தெரிவித்தார்.
மேலும் ஆறுமுக சாமி அறிக்கை பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சகர் ரகுபதி, ஆறுமுகசாமி அறிக்கையில் விஜயபாஸ்கர் பெயரை பயன்படுத்த மதுரை உயர்நீதிமன்ற கிளை இடைக்கால தடை மட்டுமே விதித்துள்ளது. சட்டத்துறை வல்லுனர்களோடு கலந்து பேசி இந்த வழக்கிலேயே ஆழமான கருத்துக்களை அடுத்தடுத்து எடுத்துரைத்து நாங்கள் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அந்த நடவடிக்கை கண்டிப்பாக எடுப்போம். ஆட்சி அவர்களிடம் இருப்பதால் கி வீரமணி போன்றவர்களை பாஜக கடுமையாக விமர்சனம்
செய்து மிரட்டி பார்க்க இருக்கிறது. வீரமணி போன்றவர்கள் எதற்கும் அஞ்சுபவர்கள் கிடையாது. திராவிட இயக்கம் எதற்கும் அஞ்சுகின்ற இயக்கம் அல்ல என்று கூறினார்.
- பி.ஜேம்ஸ் லிசா