விருத்தகிரீஸ்வரர் கோயிலில் விபசித்து முனிவருக்கு சிவபெருமான் காட்சி அளித்த திருவிழா இன்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயதை 1700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டுமானம் செய்து வடிவமைத்தவர் விபசித்து முனிவர் என புராணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபசித்து முனிவர் திருப்பணி காலத்தில் கோவிலில் தலவிருட்சமான வன்னி மரத்தின் இலைகளை திருப்பணியில் பணியாற்றும் மக்களுக்கு கூலியாக வழங்குவார். இதனை தங்கள் வீட்டுக்கு எடுத்துச்சென்று இலை முடிச்சியை அவிழ்த்து பார்க்க வேண்டும். அப்போது அவர்கள் செய்த வேலைக்கு ஏற்ப கூலியாக பொற்காசுகளாகவும், பணம் இருக்கும் என்பது இத்திருக்கோயிலில் அதிசயமாக கூறப்படுகிறது.
தற்போதும் வன்னிமரமும், கோயிலை வடிவமைத்த விபசித்து முனிவர் சிலை உள்ளது. ஆண்டுதோறும் கொண்டாடப்படும் மாசிமக பெருவிழாவல் விபசித்து முனிவருக்கு சிவபெருமான் திருவிழாவில் காட்சியளிப்பது ஆறாவது நாள் திருவிழாவாக இன்றுவரை கொண்டாடப்பட்டு வருகிறது
இந்த நிலையில் இன்று ஆறாவது நாள் திருவிழாவான நூறு கால் மண்டபத்தில் விபசித்து முனிவருக்கு சிவபெருமான் காட்சியளிக்கும் ஐதீக திருவிழா கொண்டாடப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர் மேலும் தருமபுரம் ஆதீனம் 27 வது குரு ஸ்ரீமாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரியார் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.








