அமைச்சர் உதயநிதிக்கு எதிராக இபிஎஸ் வழக்கு – ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

தம் மீது அவதூறு கருத்து வெளியிட்டதாக கூறி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த…

தம் மீது அவதூறு கருத்து வெளியிட்டதாக கூறி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில், சனாதனம் தொடர்பான அறிக்கையில் தம் மீது அவதூறு கருத்துக்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கோடநாடு வழக்கில் இருந்து தப்பிப்பதற்காகவே சனாதனத்தை தாம் ஆதரிப்பதாக உதயநிதி குறிப்பிட்டிருந்தாக எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்காக, உதயநிதி 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். தம்மை பற்றி அவதூறாக பேச அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.