எண்ணூர் எண்ணெய் கசிவு | இதுவரை 48.6 டன் அகற்றம்: தமிழ்நாடு அரசு

சென்னை எண்ணூர் பகுதியில் இதுவரை 48.6 டன் எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. சென்னை எண்ணூர் கடல் மற்றும் கொசஸ்தலை ஆற்றில் சிபிசிஎல் நிறுவனத்திலிருந்து வெளியேறிய கச்சா எண்ணெய்க் கழிவுகள் படர்ந்தது. …

சென்னை எண்ணூர் பகுதியில் இதுவரை 48.6 டன் எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

சென்னை எண்ணூர் கடல் மற்றும் கொசஸ்தலை ஆற்றில் சிபிசிஎல் நிறுவனத்திலிருந்து வெளியேறிய கச்சா எண்ணெய்க் கழிவுகள் படர்ந்தது.  இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.   இதனைத் தொடர்ந்து எண்ணெய்க் கழிவுகளை அகற்றும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்: கேப்டன் மாற்றம் எதிரொலி – சமூக வலைதளங்களில் Followers-ஐ இழக்கும் MI

எண்ணெய்க் கழிவுகளை அகற்றும் பணிக்காக அதிநவீன படகுகள்,  ஜேசிபிகள்,  ஆயில் ஸ்கிம்மர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.  சுற்றுச்சூழல்,  காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறையின் கூடுதல் தலைமைச் செயலர் சுப்ரியா சாஹு உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் எண்ணெய் அகற்றும் இடத்திற்குச் சென்று பார்வையிட்டு,  தக்க
அறிவுரைகளை வழங்கி வருகின்றனர்.

இது குறித்து தாமாக முன் வந்து தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் வழக்குப்பதிவு செய்ததில்,  விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சென்னை எண்ணூர் பகுதியில் இதுவரை 48.6 டன் எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.  மேலும் மும்பை நிறுவனத்தின் 6 வல்லுநர்களும் எண்ணெய் கழிவை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.