மின் பராமரிப்பு பணியின் போது தற்காலிக மின் தொழிலாளி மின்சாரம்
தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கே வி ஆர் நகர் 2வது வீதி கருவம்பாளையம்
பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் , திருமணமான இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது .
இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக மின்வாரியத்தில் தற்காலிக தொழிலாளராக
பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் இன்று திருப்பூர் தாராபுரம் ரோடு பி கே ஆர் காலணி அருகே உள்ள ஒரு மின்கம்பத்தில் மின்பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டுவந்தார். அப்போது எதிபாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் உடல்கருகி மின்கம்பத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து பலியானர். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் தெற்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மின்பராமரிப்பு பணியில் ஈடுபட்டபோது தொழிலாளி மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.







