உலகின் 7-வது இடத்தில் இருக்கும் இந்திய பேட்மிண்டன் இணையான சாத்விக்-சிராக், அரையிறுதியில் 22-20, 18-21, 16-21 என்ற செட் கணக்கில் மலேசிய இணையிடம் தோல்வியடைந்தது.
இதனால் இறுதிச்சுற்றுக்கு முன்னேற முடியாமல் அந்த அணி தோல்வி அடைந்தது. இருப்பினும், 3வது இடம் பிடித்த இந்திய இணை, வெண்கலத்துடன் நாடு திரும்புகிறது.
இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் கலப்பு அணி இறுதிப் போட்டியில் இதே கூட்டணியிடம் தோல்வியடைந்த சாத்விக் மற்றும் சிராக் ஜோடிக்கு மலேசிய ஜோடிக்கு எதிராக இது ஆறாவது தொடர் தோல்வியாகும்.
முன்னதாக, 27வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் ஆடவர் பிரிவில் காலிறுதியில் சாத்விக் சாய்ராஜ்-சிராக் ஷெட்டி இணை, உலக தரவரிசையில் 2வது இடத்திலுள்ள ஜப்பானின் ஹோகி-யுகோ கோபாயாஷி இணையை எதிர்கொண்டது.
1 மணி நேரம் 15 நமிடம் நீடித்த ஆட்டத்தில் 24-22, 15-21, 21-14 என்ற செட் கணக்கில் அந்த ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது.
ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய், சீனாவின் ஜோவோ ஜன் பெங்கிடம் 21-19, 6-21, 18-21 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.








