புதிய மின்சார பேருந்து சேவை – முதலமைச்சர் விஜய் துவக்கி வைத்தார்!

சென்னையில் 750 புதிய குளிர்சாதன மின்சார பேருந்து சேவையை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.

சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கத்தில், சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் முதல் கட்டமாக ரூ.697 கோடி மதிப்பீட்டில் 625 தாழ்தள மின்சார பேருந்துகள் வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூந்தமல்லி, சென்டிரல் பணிமனை மற்றும் தண்டையார்பேட்டைஆகிய 5 பணிமனைகளில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து, 2-ம் கட்டமாக 750 புதிய தாழ்தள குளிர்சாதன மின்சார பேருந்துகள் ஆலந்தூர், சென்டிரல் பணிமனை-2, பெரம்பூர், பாடியநல்லூர், ஆவடி, கே.கே.நகர் மற்றும் அய்யப்பன்தாங்கல் ஆகிய 7 பணிமனைகளில் இருந்து இயக்கப்பட உள்ளது.
இந்த மின்சார பேருந்து சேவையை முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியின் போது போக்குவரத்துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன், தலைமை செயலாளர் சாய்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.