தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றத்துடன் காணப்படுகிறது. வாரத்தின் முதல் நாளான நேற்று தங்கத்தின் விலை உயர்ந்து காணப்பட்டது. அதன்படி சென்னையில் ஆபரண தங்கம் கிராமிற்கு ரூ.80 உயர்ந்து ரூ.15,030-க்கு விற்பனை; ஒரு சரவன் தங்கம் ரூ.640 உயர்ந்து ரூ.1,20,240-க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் இன்று வெள்ளி 1 கிராமிற்கு ரூ.5 உயர்ந்து ரூ.275-க்கு விற்பனை; 1 கிலோ வெள்ளி ரூ.5000 உயர்ந்து ரூ.2,75,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்து காணப்படுகிறது. aதன்படி சென்னையில் இன்று ஆபரண தங்கம் கிராமிற்கு ரூ.20 குறைந்து ரூ.15,010-க்கும் சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.1,20.080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தைப் போன்று வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி கிராமிற்கு ரூ.10 குறைந்து ரூ.265-க்கும் கிலோவிற்குப் ரூ.10,000 குறைந்து ரூ.2,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.




