விரைவில் நல்ல செய்தி வரும் – மேட்டூர் அணை குறித்த கேள்விக்கு ஆமைச்சர் ஆனந்த் பதில்!

மேட்டூர் அணை திறப்பு குறித்து விரைவில் நல்ல செய்தி அறிவிக்கப்படும் என்று அமைச்சர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர்
கோவி செழியன், டெல்டா மாவட்ட விவசாயிகள் எப்போது காவேரி தண்ணீர் திறக்கப்படும் காத்திருக்கிறார்கள் சட்டமன்றம் நடந்து கொண்டிருக்கிறார்கள் திமுக சார்பில் மேட்டூர் அணை எப்போது திறக்கப்படும் அரசு அறிவிக்க இயலுமா? என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி , மேட்டூர் அணை நீர் திறப்பு தொடர்பாக ஏற்கனவே கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்துள்ளோம் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை
நேற்றைய தினம் நீர்வளத்துறை அமைச்சர் நீர் இல்லாத காரணத்தினால் திறக்கப்படவில்லை என கூறியிருந்தார். தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது டெல்டா மாவட்ட விவசாயிகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் வாழ்வதாரமே விவசாயம் தான் இந்த ஆண்டு சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படுமா அப்படி திறப்பதாக இருந்தால் எப்போது திறக்கப்படுமா? 15 நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட வேண்டும் அப்போது தான் விவசாயிகள் அதற்கான பணிகளை துவக்குவார்கள் என்றார்.

இதற்கு பதில் அளித்த நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், மேட்டூர் அணை திறப்பு குறித்து விரைவில் நல்ல செய்தி அறிவிக்கப்படும் என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.