ராமதாஸ் – அன்புமணி சந்திப்பு – முடிவுக்கு வருகிறதா பாமகவின் உட்கட்சி மோதல்..?

பாமக தலைவர் அன்புமணி அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸை சந்தித்துள்ளார்.

பாமகவில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. இதனால் இருவரும் இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர்.

தழிழ் நாடு சட்டமன்ற தேர்தல் 2026-ல் அன்புமணி தரப்பு என்.டி.ஏ. கூட்டணியில் அங்கம் வகித்தது. அதே சமயம் ராமதாஸ் தரப்பு சசிகலாவுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டது.

தேர்தல் முடிவில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிட்ட அன்புமணி தரப்பு 4 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். மேலும் சௌமியா அன்புமணி வெற்றி பெற்று சட்டமன்றம் சென்றுள்ளார். ஆனால் ராமதாஸ் தரப்பு வேட்பாளர்கள் தோல்வியை தழுவினர்.

இந்த நிலையில் ராமதாஸ் – சரஸ்வதி தம்பதியினரின் திருமண நாளான இன்று தைலாபுரம் தோட்டத்திற்கு அன்புமணி தனது குடும்பத்துடன் சென்றுள்ளார். அங்கு அவர் பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு மூலம் பாமகவில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நிலவி வரும் உட்கட்சி மோதல் முடிவுக்கு வருமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.