தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு, முரசு சின்னத்தை ஒதுக்கீடு செய்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் தேமுதிகவிற்கு, முரசு சின்னம் ஒதுக்கீடு செய்யும்படி அக்கட்சி இந்திய தேர்தல் ஆணையத்திற்கு வேண்டுகோள் விடுத்து இருந்தது.
அக்கட்சியின் கோரிக்கையை ஏற்ற தேர்தல் ஆணையம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் தேமுதிகவுக்கு முரசு சின்னத்தை ஒதுக்கீடு செய்வதாக அறிவித்துள்ளது. தங்கள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் முரசு சின்னத்தை ஒதுக்கியுள்ளதால் அக்கட்சியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.







