முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

கேரள காங்கிரசின் முன்னாள் எம்.பி கட்சியிலிருந்து விலகல்!

கேரள காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மூத்த தலைவருமான பி.சி சாக்கோ அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார்.

தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உட்பட நான்கு மாநிலங்களில் சட்டப்பபேரவை தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், அந்தந்த மாநிலங்களில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான பி.சி சாக்கோ அக்கட்சியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

கேரளாவில் அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் தொடங்க உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்கள் அம்மாநில அரசியல் தளத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகம் ஏதும் தற்போது இல்லையென கூறி சாக்கோ விலகியுள்ளார். இன்று மத்தியம் தனது ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பி வைத்துள்ளார்.

74 வயதான சாக்கோ, காங்கிரசின் முக்கிய செய்தியாளர்களில் ஒருவராவார். திருச்சூரிலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு எம்.பியாக பதவி வகித்திருந்தார். மேலும், எதிர் வரக்கூடிய சட்டப்பேரவை தேர்தலில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள், இது குறித்து மாநில தலைவர்களிடம் ஆலோசிக்கப்படவில்லையென்றும், மேலும், மாநில தலைவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்றும் கூறி பதவி விலகியுள்ளார்.

Advertisement:

Related posts

அதிமுகவில் 5 இடங்கள் கோரிய புதிய நீதிக் கட்சி!

Gayathri Venkatesan

ஐந்து கிலோ மீட்டருக்கு தடுப்பணை கட்டப்படும்: ராமதாஸ்!

Ezhilarasan

பிரிட்டன் பிரதமர் 3 வது திருமணம்.. காதலியை ரகசியமாக மணந்தார்!

Karthick