இளைஞர்கள் கண்ணியமான சம்பளம் பெறும் வகையில் அரசு வேலைவாய்ப்பு வழங்குவதே தங்களது லட்சியம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
திருவள்ளூர் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் பசுபதியை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட சீமான், மற்ற கட்சிகளைப் போல மாதம் 1,500 ரூபாய் தருவேன், 1,000 ரூபாய் தருவேன் என்று சொல்ல விரும்பவில்லை. நாங்கள் ஆட்சி அமைத்தால், படித்தவர் படிக்காதவர்கள் என அனைவரும், 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறும் வகையில் அரசு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கட்சிகள் தரும் பணத்திற்காக வாழ்க்கையை இழக்காதீர்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். வரும் சட்டப்பேரவைத் தேர்தல் வழக்கமான ஒரு தேர்தல் அல்ல என்றும், முழுக்க முழுக்க மாறுதலுக்கான தேர்தல் என்றும் சீமான் குறிப்பிட்டார்.







