முக்கியச் செய்திகள் இந்தியா தேர்தல் 2021 செய்திகள்

கேரளா, புதுச்சேரியில் இன்றுடன் ஓய்கிறது தேர்தல் பரப்புரை!

தமிழகத்தைப் போலவே, கேரளா மற்றும் புதுச்சேரியிலும் இன்று மாலையுடன் தேர்தல் பரப்புரை ஓய்கிறது.

கேரளாவில் 140 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அங்கு உச்சகட்ட தேர்தல் பரப்புரை நடைபெற்று வருகிறது. தேசிய கட்சிகளின் ஆதிக்கம் உள்ள மாநிலம் என்பதால், மாநில தலைவர்கள் மட்டுமல்லாது, தேசிய தலைவர்களும் கேரளாவில் முகாமிட்டு தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இன்று மாலையுடன் கேரளாவில் தேர்தல் பரப்புரை முடிவுக்கு வருகிறது. புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழு வீச்சில் மேற்கொண்டுள்ளது. தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடைய உள்ளதால், அனைத்து வேட்பாளர்களும் முழு வீச்சில் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

மேற்கு வங்கத்தின் 3ம் கட்டத் தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளதை முன்னிட்டு, வாக்குப் பதிவு நடைபெறும் 31 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது. மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை இரண்டு கட்ட தேர்தல் முடிந்துள்ளது. 3ம் கட்டத் தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளில் இன்று மாலையுடன் பரப்புரை முடிவுக்கு வர உள்ளதால், இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்

அஸ்ஸாமில் மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. 40 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளதால், அந்த மாநிலத்தில் இன்று மாலையுடன் தேர்தல் பரப்புரை முடிவுக்கு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

’வட இந்தியர்களுக்குத் தற்காலிக (அ) நிரந்தர குடியிருப்பு வழங்க உதவ வேண்டும்’

கருக்கலைப்பு உரிமையை ரத்து செய்த அமெரிக்க உச்சநீதிமன்றம்

Web Editor

‘மத்திய பட்ஜெட் தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Web Editor