“திரிணாமூல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியமைக்கும்”: மமதா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் 200 தொகுதிகள் வரை, திரிணாமூல் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் என அந்த கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மம்தா பானர்ஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேற்கு வங்கம் கூச்பெஹாரில் நடைபெற்ற பரப்புரைக்…

மேற்கு வங்கத்தில் 200 தொகுதிகள் வரை, திரிணாமூல் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் என அந்த கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மம்தா பானர்ஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கம் கூச்பெஹாரில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பேசிய அவர், தான் நந்திகிராம் தொகுதியில் நிச்சயம் வெற்றி பெற வாய்ப்பிருப்பதாக கூறினார். தான் மட்டுமின்றி திரிணாமூல் கட்சி வேட்பாளர்கள் 200 பேர் வரை வெற்றி பெறுவார்கள் என்றும் குறிப்பிட்டார். மீண்டும் திரிணாமூல் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைப்பது உறுதி என்றும் மம்தா பானர்ஜி நம்பிக்கை தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் இரண்டு கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. மூன்றாவது கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 6 ஆம்தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.