சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் நேற்று பாமக தலைவர் அன்புமணி நேரில் சந்தித்தார். அப்போது சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து இரு தலைவர்களும் இறுதி செய்தனர். இதையடுத்து சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுக – பாமக இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் ஜெயக்குமார், வழக்கறிஞர் பாலு, திலகபாமா ஆகியோர் உடன் இருந்தனர்.
இதையடுத்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க டெல்லி சென்றார். இந்த நிலையில் நேற்று இரவு டெல்லி கிருஷ்ணமேனன் மார்க்கில் உள்ள மத்திய அமைச்சர் அமித்ஷாவின் இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை சந்தித்து பேசினார். அதிமுக – பாஜக கூட்டணியில் பாமக இணைந்த நிலையில், கூட்டணியில் மேலும் சிலரை இணைப்பது குறித்து அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.







