சென்னையில் ரூ.280 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

சென்னையில் ரூ. 280 கோடி மதிப்பிலான 56 கிலோ மெத்தபெட்டமைன் போதைப் பொருளை மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சென்னையில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த இலங்கை நாட்டைச்…

சென்னையில் ரூ. 280 கோடி மதிப்பிலான 56 கிலோ மெத்தபெட்டமைன் போதைப் பொருளை மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னையில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த இலங்கை நாட்டைச் சேர்ந்த உதயகுமார் என்பவர் மெத்தபெட்டமைன் போதைப் பொருளை கடத்துவதாக கடந்த டிச.10-ம் தேதி மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து உதயகுமாரிடம் விசாரணை நடத்திய போலீசார், அவரிடம் இருந்து இரண்டு கிலோ போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.

மேலும் அவரிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், பெரம்பூரைச் சேர்ந்த அக்பர் அலி என்பவர் உதயகுமாருக்கு போதைப் பொருள் சப்ளை செய்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, கடத்தலில் ஈடுபட்ட உதயகுமார் மற்றும் அக்பர் அலி ஆகிய இருவரையும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர்.

இதையும் படியுங்கள்: தென்தமிழகத்தில் கொட்டி தீர்த்த கனமழை | நெல்லை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் கடும் தண்ணீர் பஞ்சம் | களத்தில் நியூஸ் 7 தமிழ்!

இதனை தொடர்ந்து உதயகுமார் மற்றும் அக்பர் அலி தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டதில், ரூ. 280 கோடி மதிப்பிலான 56 கிலோ மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த போதைப் பொருளை மியான்மர் நாட்டிலிருந்து மணிப்பூர் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்றதும் விசாரணை வாயிலாக தெரியவந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.