போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற எண்ணத்தை முன் நிறுத்தி, சென்னையில் இருந்து கடலூருக்கு 11 வயது சிறுவன் 200 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டார்.
கடலூர் கோண்டூர் பகுதியை சேர்ந்தவர் சபரி வேலவன் ( வயது 11 ). இவர் கடலூர் அரிஸ்டோ பள்ளியில் படித்து வருகிறார். போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற எண்ணத்துடன் விழிப்புணர்வு சைக்கிள் பிரச்சாரத்தை, சென்னையில் காலை 6 மணிக்கு தொடங்கி கடலூரில் மாலை 4:30 மணிக்கு முடித்து சாதனை புத்தகத்தில் இடம் பெற்று உள்ளார்.
சென்னையில் போக்குவரத்து ஆணையர் சமே சிங் மீனா இந்த விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை துவக்கி வைத்தார். பின்னர், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் நிறைவு செய்யும் போது வரவேற்று வாழ்த்தினார். விழாவில் கடலூர் மாநகராட்சி ஆணையர் நவேந்திரன், கடலூர் துணைக்காவல் கண்காணிப்பாளர் கரிகால் பாரி சங்கர், தாசில்தார் பலராமன் உள்ளிட்டவர்கள் வாழ்த்து தெரிவித்தார்கள்.
விழிப்புணர்வு பிரச்சாரம் குறித்து மாணவன் சபரி வேலவன் கூறுகையில், “தமிழ்நாடு அரசு, போதை பொருட்கள் இல்லாத நிலை பாட்டை ஏற்படுத்த வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இதற்கு உறுதுணையாக நான் சைக்கிள் மூலம் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டேன்.
இதில் 200 கிலோமீட்டர் பயணத்ததில் 5 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் மற்றும் அரசு மற்றும் தனியார் நிறுவனத்தின் ஊழியர்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினேன். போதைப் பொருட்கள் இல்லாத மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினேன்” என்றார்.
VISUAL IS IN FTP- SLUG NAME – CDL DRUG AWARE CYCLE RALLY(SPORTS)
ம.







