திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சுவாமி தரிசனமானது ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் வழியே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுத் தடையின்றி நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நேற்றும், இன்றும் பௌர்ணமி என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துவிட்டு கிரிவலம் வருகின்றனர்.
பௌணர்மியையொட்டி நேற்று அதிக அளவில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து இன்று பக்தர்கள் வசதிக்காக ராஜகோபுரம் மற்றும் அம்மனி அம்மன் கோபுரம் வழிகளில் நீண்ட வரிசைகள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு எவ்வித சிசரமும் இன்றி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக ராஜகோபுரம், அம்மணி அம்மன் கோபுரம், திருமஞ்சனம் கோபுரம், பேகோபுரம், கிளி கோபுரம் ஆகிய வழிகளில் பக்தர்கள் உள்ளே மற்றும் வெளியே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்