முக்கியச் செய்திகள் இந்தியா

”கள்ளச்சாராயம் குடித்தால் இறப்பது உறுதி” – இழப்பீடு கோரியவர்களுக்கு பீகார் முதலமைச்சர் பதில்

பீகாரில் போலி மதுபானம் அருந்திய 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். 

பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு மது அருந்துவதற்கும், விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தடையை மீறி அங்கு தொடர்ந்து பல பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் பீகாரின் சரண் மாவட்டத்தில் உள்ள சாப்ரா பகுதியில், தடையை மீறி சிலர் மது அருந்தியுள்ளனர். பின்னர் அவர்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பின்னர் மது அருந்தியவர்கள் உயிரிழக்க தொடங்கினர். முதலில் 5 பேர் உயிரிழந்த நிலையில், மது அருந்திய மற்ற நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், தொடர்ந்து மது அருந்தியவர்கள் உயிரிழந்து வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி, 39 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இழப்பீடு வழங்க நிதிஷ் குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், ”கள்ளச்சாராயம் அருந்தினால் இறந்து போவது நிச்சயம். இதற்கு தற்போது ஒரு உதாரணம் காட்டப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாங்கள் தொடர்ந்து பல்வேறு சமூக விழிப்புணர்வு இயக்கங்களை நடத்தி வருகிறோம். மதுவிலக்கு இல்லாத காலத்திலும்கூட, போலி மதுபானங்களால் மக்கள் உயிரிழந்துள்ளனர். மற்ற மாநிலங்களிலும் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. மதுபானத்தின் தீமைகள் பற்றியும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் பற்றியும், மகாத்மா காந்தியும், உலக ஆராய்ச்சியாளர்களும் கூறியவற்றை ஒவ்வொரு வீட்டிற்கும் எடுத்து செல்லப்பட்டுள்ளது. இருப்பினும் நீண்ட காலமாக நாடு முழுவதும் மக்கள் போலி மதுபானங்களால் உயிரிழந்து வருகின்றனர்.

நாங்கள் கடுமையான நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். மதுவிலக்கு அமலில் இருக்கும்போது, தடையைமீறி ​​விற்கப்படும் மதுபானங்களில் ஏதேனும் தவறு நிச்சயம் இருக்கும். நினைவில் கொள்ளுங்கள். மக்கள் யாரும் மது அருந்தக்கூடாது. பெரும்பாலான மக்கள் மதுவிலக்கு கொள்கையுடன் உடன்பட்டுள்ளனர். ஆனால் சிலர் இதுபோன்ற தவறுகளில் ஈடுபடுகின்றனர்” என்று தெரிவித்தார்.

போலி மதுபானங்களால் உயிரிழந்தவர்களின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்கும், என அம்மாநில அமைச்சர் சுனில் குமார் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram