திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் நாம் தமிழர் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த பொதுக் குழுவில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து உரையாற்றிய சீமான், ”நாங்கள் திராவிடர்கள் என்பவர்கள் ஒருபக்கம், நாங்கள் தமிழர்கள் என்பவர்கள் ஒருபக்கம். எல்லாமே பெரியார் என்பவர்கள் எங்களுக்கு ஓட்டு போடவேண்டாம். எங்கள் இனத்தில் எண்ணற்ற பெரியார்கள் உள்ளனர்.
திராவிடர்கள் என்பவர்கள் எவரும் எனக்கு ஓட்டு போடவேண்டாம். தமிழர்கள் என்று எண்ணுபவர்கள் மட்டும் எனக்கு ஓட்டு போட்டால் போதும். சாதி, மதத்தை பார்ப்பவர்கள் ஒருபக்கம் நிற்கட்டும். மனிதமே புனிதம் என்பவர்கள் என்பக்கம் நிற்கட்டும்.
பள்ளியில், கல்லூரியில் அரசியல் பேசக் கூடாது. ஆனால் சினிமா பேசலாம். திரைக்கவர்ச்சியானது ஒரு மதமாக மாறி நிற்கிறது; இறை வழிபாட்டை விமர்சித்த கட்சிகள் தற்போது திரை வழிபாட்டை போற்றுகிறார்கள். கதாநாயகன் வழிபாடானது கடவுள் வழிபாட்டை விட மேலானதாக கட்டமைத்து விடப்பட்டுவிட்டது” என்றார்.







