தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 7.0 ஆக பதிவு!

தைவான் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

தைவான் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் கடற்கரை நகரமான இலென் நகரில் இருந்து 32 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி இரவு 11.05 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 7.0 ஆக ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் அதிர்ந்துள்ளது.

நிலநடுக்கத்தால் இரவு வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த மக்கள் அச்சமடைந்து சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டதா? என்பது குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை. தைவானில் கடந்த புதன்கிழமையும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவான நிலையில் கட்டிடங்கள் அதிர்ந்ததால் மக்கள் அச்சமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.