4 வது டி20 போட்டி : இந்தியா – இலங்கை அணிகள் இன்று மோதல்!

இந்தியா-இலங்கை மகளிர் அணிகள் மோதும் 4-வது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடக்கிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனேவே நடந்து முடிந்துள்ள 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என இந்திய அணி கைப்பற்றியது. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 4வது டி20 போட்டி இன்று திருவனந்தபுரத்தில் நடக்கிறது. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தன் பயணத்தை தொடர முயற்சிக்கும். ஆனால் தொடரை இழந்துள்ள இலங்கை அணி ஆறுதல் வெற்றி பெற தீவிரம் காட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.