மலேசியாவில் ஜனநாயகன் ; டிவிகே… டிவிகே.. என எழுந்த கோஷம் – ரசிகர்களை நோக்கி விஜய் செய்த சைகை …!

மலேசியாவில் நடைபெற்று வரும் ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களில் ஒரு பகுதியினர் டிவிகே… டிவிகே… என விஜயின் கட்சி பெயரை சொல்லி ஆர்ப்பரித்தனர்.

நடிகர் விஜய் – ஹெச்.வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம்  ’ஜனநாயகன்’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருக்கும் புக்கீட் ஜலீல் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் விஜய், பூஜா ஹெக்டே அனிரூத் உள்ளிட்ட படக்குழுவினருடன் நெல்சன், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட இயக்குநர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த விழாவிற்கு கோட் சூட் அணிந்தபடி வருகை தந்த நடிகர் விஜய், ரேம்ப் வாக் மேடையில் ரசிகர்களை நோக்கி கை அசைத்தவாறு சென்றார். தொடர்ந்து தனது வழக்கமான பாணியில் ரசிகர்களுடன் செல்பி வீடியோவும் எடுத்துக் கொண்டார்.

இதனிடையே ரசிகர் கூட்டத்தில் ஒரு பகுதியினர் டிவிகே… டிவிகே… என விஜயின் கட்சி பெயரை சொல்லி ஆர்ப்பரித்தனர். அப்போது விஜய் ’’இங்கே வேண்டாம்’’ என்பது போல் சைகை செய்தார். இது தொடர்பான காணொலிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.