பணிப் பெண் சித்ரவதை செய்யப்பட்ட விவகாரம் – பல்லாவரம் திமுக எம்எல்ஏ-வின் மகன், மருமகள் கைது!

பணிப் பெண் சித்ரவதை செய்யப்பட்ட விவகாரத்தில் பல்லாவரம் திமுக எம்எல்ஏ-வின் மகன், மருமகள் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதி மகன் ஆன்டோ மதிவாணன் திருவான்மியூரில் வசித்து வருகிறார். …

பணிப் பெண் சித்ரவதை செய்யப்பட்ட விவகாரத்தில் பல்லாவரம் திமுக எம்எல்ஏ-வின் மகன், மருமகள் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதி மகன் ஆன்டோ மதிவாணன் திருவான்மியூரில் வசித்து வருகிறார்.  இவரது மனைவி மெர்லினா. இவர்கள் வீட்டில் பட்டியலின இளம் பெண் ஒருவரைக் கடந்தாண்டு முதல் வேலைக்கு இருந்தார்.  இந்த பெண்ணை திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மருமகள் மெர்லினா தாக்கி துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனை அடுத்து,  இந்த விவகாரம் தொடர்பாக திருவான்மியூர் மகளிர் காவல் நிலையத்தில் 6 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  எஸ்சி/எஸ்டி சட்டப்பிரிவுகள்,  ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் உள்பட 6 பிரிவுகளில் வழக்குப்பதியப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:  “என் அரசியல் நான் எடுக்கும் சினிமாதான்” – இயக்குனர் மிஷ்கின்

ஆண்ட்ரோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லின் ஆகியோர் தலைமறைவானதை தொடர்ந்து,  அவர்களை பிடிக்க சென்னை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் ஆந்திராவில் பதுங்கியிருந்த  ஆண்ட்ரோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லின் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  மேலும்,  கைது செய்யப்பட்ட இருவரையும் சென்னை அழைத்து வந்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.