திமுக எம்.பி கனிமொழி தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் கூறியிருப்பதாவது, “எல்லாவற்றிலும் திசைத்திருப்பும் அரசியலைச் செய்துவரும் தவெக அரசு, காவிரி பிரச்சனையைத் திசைத்திருப்ப அடுத்ததாக காவிரி ஆற்றங்கரையில் கூட “ஆய்வு” நடத்தலாம்.
மாநில உரிமைகளை அடகு வைத்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கிவிட்டு, விளம்பர மயக்கத்தில் தமிழ்நாட்டை வைத்திருக்கலாம் என்று நினைக்கிறதா தவெக அரசு?
டெல்டாவில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டதோடு, தற்போது பாதி தமிழ்நாட்டிற்கு குடிநீர்ப் பிரச்சினை வருமளவுக்கு காவிரி விவகாரம் சென்றுவிட்டது. தவெக அரசு இனியும் இப்பிரச்னையில் மௌனம் காக்காமல், உடனடியாக நடவடிக்கை வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




