அசாம் மாநிலம் குவஹாத்தி அருகே இந்த ரயில் விபத்து நிகழ்ந்துள்ளது. கொல்கத்தா – சைராங் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று (நவம்பர் 11) காலை 6.54 மணியளவில் டிகாரு ரயில் நிலையம் அருகேசென்றுகொண்டிருந்தபோது தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
5 பெட்டிகள் தடம் புரண்டன!
இந்த விபத்து குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மற்றொரு ரயில் கடந்து செல்வதற்கு வழிவிடும் முயற்சியில் ஈடுபட்டபோது, ரயிலை இயக்கிய லோகோ பைலட்டால் (ரயில் ஓட்டுநர்) வேகத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் ரயில் இன்ஜின் மற்றும் 5 பெட்டிகள் தடம் புரண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் அனைவரும் பாதுகாப்பு!
இந்த விபத்தில் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், ஒரு சிலருக்கு மட்டுமே லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் உடனடியாகத் தொடங்கப்பட்டன. ரயில்வே அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும், பாதிக்கப்பட்ட ரயிலில் பயணம் செய்த பயணிகள் தங்களது இலக்கைச் சென்றடைவதற்காக மாற்று ரயில் ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே, மருத்துவமனையில் எடுக்கப்பட்ட காட்சிகளில் சில பயணிகள் தங்களுக்கு ஏற்பட்ட லேசான காயங்கள் குறித்து தெரிவித்துள்ளனர்.




