நாமக்கல்லில் முட்டை விலை சரிவி! – இன்றைய நிலவரம் என்ன?

நாமக்கல்லில் முட்டை ஒன்றின் கொள்முதல் விலை ரூ.30-காசுகள் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

நாமக்கல்லில் 1000-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் இருந்து கோடிக்கணக்கான முட்டைகல் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த முட்டகள் தமிழ்நாடு முழுவதும் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

நாமக்கல் முட்டை கொள்முதல் விலையை முட்டை ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகள் தினந்தோறும் கூடி முடிவு செய்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக கோழித் தீவனங்களின் விலை உயர்வு, பராமரிப்புச் செலவுகள் அதிகரிப்பு மற்றும் சந்தையில் முட்டைக்கான தேவை அதிகரித்திருப்பது ஆகிய காரணங்களால் முட்டை விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது.

இந்த நிலையில் ஆடி மாதத்தை ஒட்டி மூட்டையின் விற்பனை சரிந்தது. இதனால் கடந்த ஒருவாரகாலமாக முட்டையின் விலை குறைந்து வருகிறது. அதன்படி நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் கொள்முதல் விலை ரூ.6.00 ஆக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 30 காசுகள் குறைந்து ரூ.5.70 ஆக முட்டை விலை நிர்ணயம் செய்து தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது. அதேபோல சென்னையில் முட்டை ஒன்றின் விலை ரூ. 6.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஒரு வாரத்தின் விலை ரு.1.10 குறைந்துள்ளது குறிப்பிடத் தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.