பாஜக அரசை வீட்டுக்கு அனுப்பும் வரை திமுகவினர் தூங்க மாட்டார்கள் -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

பாஜக அரசை வீட்டுக்கு அனுப்பும் வரை திமுகவினர் தூங்க மாட்டார்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். மக்களவை தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 20 நாட்கள் உள்ளன.  பரப்புரைக்கு 18 நாட்கள் மட்டுமே அவகாசம்…

பாஜக அரசை வீட்டுக்கு அனுப்பும் வரை திமுகவினர் தூங்க மாட்டார்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 20 நாட்கள் உள்ளன.  பரப்புரைக்கு 18 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது.  அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் பிரதானமாக திமுக,  அதிமுக,  பாஜக,  நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது.  குறிப்பாக,  திமுக கூட்டணி சார்பில் வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின்,  உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள்,  அக் கட்சியின் மூத்த தலைவர்கள் தொகுதிவாரியாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அந்தவகையில்,  மதுராந்தகம் பேருந்து நிலையம் அருகே காஞ்சிபுரம் திமுக வேட்பாளர் செல்வத்திற்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பரப்புரை மேற்கொண்டார். 

அப்போது அவர் பேசியதாவது:

மதுராந்தகம் ஏரி ரூ.100 கோடி மதிப்பீட்டில் தூர்வாரப்பட்டது. செய்யூர்,  மதுராந்தகம் மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் அரசு கல்லூரிகள் அமைக்கப்படும்.  கொரோனா காலங்களில் தமிழக மக்களுக்குத் தடுப்பூசி போடுவதற்கு மருந்து இல்லை என கூறியவர் பிரதமர் நரேந்திர மோடி.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது தமிழக மக்களைப் பார்வையிட நரேந்திர மோடி வரவில்லை.  தேர்தல் வந்ததால் தொடர்ந்து தமிழகத்திற்கு வருகிறார்.  கடந்த பத்து வருடங்கள் ஆட்சி காலத்தில் எல்லா வசதிகளையும் அனுபவித்தது நரேந்திர மோடியின் நண்பர் அதானி குடும்பம் மட்டும் தான்.

பிரதமர் மோடி திமுகவினர் தோல்வி பயத்தின் காரணமாகத் தூங்கவில்லை என கூறி வருகிறார்.  பாஜக அரசை வீட்டுக்கு அனுப்பும் வரை திமுகவினர் தூங்க மாட்டார்கள்.

இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.