முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

173 தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு:ஸ்டாலின் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக போட்டியிடும் 173 தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர் பெயர்களை இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் முதன் முறையாக சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநீதி ஸ்டாலின் போட்டியிடுகிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

திமுக போட்டியிடும் தொகுதிகளின் பெயர் பட்டியல் இன்று வெளியிடப்படுவதற்கு முன்பு மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின், கழக பொதுச் செயலாளர் துரைமுருகன் மற்றும் கழக உறுப்பினர்கள் மரியாதை செலுத்தினார்கள்.
அதன்பின்னர் அண்ணா அறிவாலயம் சென்ற மு.க.ஸ்டாலின் திமுக போட்டியிடும் 173 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்களை வெளியிட்டார்.


காட்பாடி தொகுதியில் கழக பொதுச் செயலாளர் துரைமுருகன், திருச்சி மேற்கு கே.என்.நேரு, திண்டுக்கல் (ஆத்தூர்) ஐ.பெரியசாமி, திருவண்ணாமலை எ.வ.வேலு, திருக்கோயிலுர் க. பொன்மூடி, திருச்சூழி தங்கம் தென்னரசு, போடிநாயக்கனூர் தொகுதியில் துணை முதல் ஓ. பன்னிர்செல்வத்தை எதிர்த்து தங்க தமிழ்ச்செல்வன், கரூர் செந்தில்பாலாஜி, சைதாப்பேட்டை மா.சுப்பிரமணியன், கன்னியாகுமரி ஆஸ்டின், எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிச்சாமியை எதிர்த்து த. சம்பத்குமார், திருவாரூர் பூண்டி கலைவாணன், ஆலங்குளம் தொகுதியில் பூங்கோதை ஆலடி அருணா, தூத்துக்குடி தொகுதியில் கீதா ஜீவன், மொடக்குறிச்சியில் சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளிட்ட 173 வேட்பாளருக்கான பெயர் பட்டியலை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார்.
தொகுதி வேட்பாளர் பெயர் பட்டியலை வெளியிட்ட பிறகு பேசிய ஸ்டாலின், “ 1971-ம் ஆண்டு 184 இடங்களில் உதய சூரியன் சின்னம் வெற்றிபெற்றது. அதேபோல் இந்த முறையும் திமுகவின் அந்த சாதனையை திமுகவே முறியடிக்கும். இப்போது நான் வாசித்தது வேட்பாளர்களின் பட்டியல் அல்ல வெற்றியாளர்களின் பட்டியல். தமிழகத்தில் தேர்தல் நடைபெறவுள்ள 234 தொகுதிகளிலும் திமுகவே போட்டியிடுகிறது என்ற எண்ணத்தில் கழக தொண்டர்கள் பணியாற்றவேண்டும்” என அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இந்தியாவில் வேகமாக குறையும் கொரோனா

Vandhana

இயக்குநர் பார்த்திபன் ஒரு டெக்னாலஜி சீனியர்-முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு

Web Editor

லாக்டவுன் கக்கண்டி, சுனாமி ராய், கார்கில் பிரபு – இப்படியெல்லாம் கூட பெயர் வைப்பார்களா?

G SaravanaKumar