முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

புதுச்சேரியில் காங்கிரஸ் தனித்துப் போட்டி?

புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் தீமானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

திமுகவுடன் நடத்தப்பட்ட பலகட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில், நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் புதுச்சேரியில் காங்கிரஸ் தனித்து களம் இறங்க உள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இது தொடர்பாக, புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், இன்று நடைபெற்ற அக்கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக் குழவில், காங்கிரஸ் தனித்துப் போட்டியிட விலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

திமுக – காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் திமுக தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் முன்னிலையில் கையெழுத்தானது. புதுச்சேரியில் உள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அதில், காங்கிரசுக்கு 15 தொகுதிகளும் திமுகவிற்கு 13 தொகுதிகளும் விடுதலைச் சிறுதைக்கள் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலா ஒரு தொகுதி என ஒதுக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கொரோனா தொற்றில் இருந்து விடுபடுவது எப்போது?

Gayathri Venkatesan

ரூ.40 ஆயிரம் கோடி கடன் வழங்க நபார்டு திட்டம்!

19-வது நாளாக தொடரும் T23 புலியை தேடும் பணி

G SaravanaKumar