திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தின் ‘விடியலுக்கான முழக்கம்’ என்ற தலைப்பில் திமுகவின் பிரம்மாண்ட தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டம் திருச்சி – சென்னை பைபாஸ் சாலையில் உள்ள சிறுகனூரில் நடைபெற்றது.
பொதுக்கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் துவக்க உரை ஆற்றினார். இதையடுத்து தமிழகத்தின் பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வி மற்றும் சுகாதாரம், நகர்ப்புற வளர்ச்சி, ஊரக உட்கட்டமைப்பு, சமூக நீதி ஆகியவற்றை மேம்படுத்த ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள் என்ற தலைப்பில் தொலைநோக்கு திட்டத்தை மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.
அப்போது பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்தால், குடும்பத் தலைவிகளுக்கு
மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனத் தெரிவித்தார். ஆண்டுதோறும் 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் எனவும் பொருளாதார ரீதியாக நலிவடைந்துள்ள 1 கோடி மக்களை அடுத்த 10 ஆண்டுகளுக்குள் மீட்போம் என்றும் கூறினார்.







