தமது வாழ்க்கையில் அரசியல் அற்புதம் நடைபெறும் இடம், கோவை தெற்கு தொகுதிதான் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் கமல்ஹாசன், வெரைட்டி ஹால் ரோடு ,கெம்பட்டி காலனி, செட்டி வீதி ஆகிய பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், அரசியல்வாதியாக தாம் பிறந்த ஊர், கோவை தெற்கு தொகுதிதான் என தெரிவித்தார்.
மத நல்லிணக்கத்திற்கு எதிராக நடக்ககூடிய சூழ்ச்சிகளை தகர்க்க வேண்டி, இந்த தொகுதியை தேர்ந்தெடுத்துள்ளதாக, அவர் கூறினார். அரசியல்வாதிகள் எப்படி இயங்க வேண்டும் என்பதை, காந்தியடிகள் எழுதி வைத்துள்ளதாகவும், அதைப்போன்று தாம் செயல்படுவேன் என்றும், கமல்ஹாசன் குறிப்பிட்டார். மாணவர்களுக்கு தரமான கல்வியை கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், அரசு ஆசிரியர்கள் பெறும் சம்பளத்தை போன்று , தனியார் பள்ளி ஆசிரியர்களும் சம்பளம் பெற வேண்டும், என்றும் அவர் கூறினார்.







