விஜய் சேதுபதி நடிக்கும் முதல் இந்தி திரைப்படம்: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாக இருக்கும் முதல் இந்தி திரைப்படமான ’மும்பைகர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிந்துள்ளார்.…

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாக இருக்கும் முதல் இந்தி திரைப்படமான ’மும்பைகர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிந்துள்ளார்.

லோகேஷ் கனராஜ் இயக்கித்தில் வெளியான மாநகரம் படத்தின் இந்தி ரிமேக்தான் ’மும்பைக்கர்’ திரைப்படம். இத்திரைப்படத்தை சந்தோஷ் சிவன் இயக்க, பிரசாந்த் பிள்ளை இசையமைக்கிறார். விக்ராந்த் மாசே, விஜய் சேதுபதி, தன்யா மாணிக்டலா, ஹ்ரிது ஹரூன், சஞ்சய் மிஸ்ரா, ரன்வீர் ஷோரே ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இது விஜய் சேதுபதியின் முதல் இந்தி திரைப்படமாகும்.

இப்படத்தின் கதாநாயகரான விக்ராந்த் மாசேவின் பிறந்தநாளை முன்னிட்டு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.