முக்கியச் செய்திகள் தமிழகம்

அனுமதிக்கப்பட்ட நபர்களுக்கு மட்டும்தான் தடுப்பூசியா? மு.க.ஸ்டாலின் கேள்வி!

அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த கொள்கை முடிவு எடுக்க வேண்டுமென திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.  

கொரோனா  தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.தமிழ்நாட்டில் இன்று 96,513 நபர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 7,819 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 9,54,948ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் நடைபெற்று வருகின்றனர். 


இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் இதுவரை முதல் டோஸ் 35.67 லட்சம், இரண்டாவது டோஸ் 4.53 லட்சம் என்ற அளவில் மொத்தம் 40.21 லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பிற்கு இது எப்படி போதுமானதாக இருக்கும்? ஏன் அ.தி.மு.க. அரசு அதிக தடுப்பூசிகளை கேட்டுப் பெறவில்லை? எனக் கேள்வி எழுப்பினார். 

உயிர்காக்கும்   தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ள மக்கள் முன்வரவில்லை என்றால் – அதற்கு மத்திய அரசும், அதிமுக அரசுமே முழுப் பொறுப்பேற்க வேண்டும். ஏனென்றால் தடுப்பூசியின் பாதுகாப்பு பற்றி உரிய வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தத் தவறியது இரு அரசுகளும்தான் என்று குறிப்பிட்டார் ஸ்டாலின். 

அனுமதிக்கப்பட்ட அனைத்து நபர்களுக்கும் விரைந்து தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர்  நரேந்திர மோடி   குறிப்பிட்டதாக சுட்டிக்காட்டிய அவர்,  கொரோனா தொற்று தமிழ்நாட்டில் வேகமாகப் பரவி மருத்துவமனைகள் எல்லாம் நிரம்பி வழியும் சூழ்நிலை உருவாகியுள்ள இந்த நேரத்தில், அனைவருக்கும் தடுப்பூசி என்ற கொள்கை முடிவினை எடுத்து தமிழகத்திற்குத் தேவையான தடுப்பூசிகளைத் தாமதமின்றி போர்க்கால அடிப்படையில் அனுப்பி வைக்க வேண்டும் என பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தமிழக அரசு அதிகாரிகளும் போதிய விழிப்புணர்வை இப்போதாவது ஏற்படுத்தி – அனைவருக்கும் தடுப்பூசி போடுவதில் முனைப்புடன் பணியாற்ற வேண்டும். அனைவரும் தாங்களாகவே முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 

Advertisement:

Related posts

தமிழகத்தில் ரூ.52,257 கோடியில் 34 புதிய திட்டங்களுக்கான முதலீட்டிற்கு அமைச்சரவை ஒப்புதல்!

Niruban Chakkaaravarthi

எங்களின் மிகப்பெரிய எதிரி அமெரிக்கா தான்; வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கருத்து!

Saravana

ஷாஹித் கபூர், மாளவிகா மோகனனுடன் கைகோர்க்கும் விஜய் சேதுபதி!

Jayapriya