தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 7,819 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 96,513 நபர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 7,819 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 9,54,948ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று மட்டும் சிகிச்சைப் பலனின்றி 25 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பின் மொத்த எண்ணிக்கை 12,970 ஆக உயிர்ந்துள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 3,464 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தொற்று பாதிப்பால் தற்போது வரை சிகிச்சைப் பெற்று வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 54,315 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மட்டும் 2,564 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 7 பேர் உயிரிழந்துள்ளார். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 20,144ஆக அதிகரித்துள்ளது. சென்னையை அடுத்தப்படியாக உள்ள செங்கல்பட்டில் 772 பேருக்கும் கோவையில் 540 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.







