முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சென்னையில் 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி; ஆணையர் தகவல்!

சென்னை மாநகராட்சியில் இதுவரை 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஒருவாரமாக கொரோனா தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக சென்னையில் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை தியாகராய நகர் ராமேஸ்வரம் தெருவில் உள்ள காய்ச்சல் சிறப்பு முகாமை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சென்னையில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து ஒவ்வொரு வீடாக கொரோனா ஆய்வு நடத்தி வருகிறோம். இதற்காக 12 ஆயிரம் தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்போதுள்ள 50 மருத்துவ முகாம்களை 800 ஆக மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும், 45 வயதுக்கு மேற்பட்டோர் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என்றும் தெரிவித்தார். தடுப்பூசி போடுவதை மக்கள் தேசிய கடமையாக நினைக்க வேண்டும் என தெரிவித்த அவர், இதுவரை 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Advertisement:

Related posts

அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் எம்.எல்.ஏ.க்கள்: புதுச்சேரி காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி!

Ezhilarasan

மியான்மரில் துப்பாக்கி சூடு; உலக தலைவர்கள் கண்டனம்!

Jeba

ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

Saravana Kumar