முக்கியச் செய்திகள் இந்தியா

ஜனநாயகத்தின் தாயாக இந்தியா இருக்கிறது: பிரதமர் மோடி

உலகில் ஜனநாயகத்தின் தாயாக இந்தியா இருந்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

இந்திய பல்கலைக்கழகங்கள் சங்கத்தின்  95வது ஆண்டு கூட்டம் மற்றும் துணைவேந்தர்களின் தேசியக் கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் கலந்துகொண்டார். அப்போது, கிஷோர் மக்வானா எழுதிய அம்பேத்கர்  தொடர்பான நான்கு புத்தகங்களையும் அவர்  வெளியிட்டார்.  

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர்,  உலகில் ஜனநாயகத்தின் தாயாக இந்தியா இருந்து வருகிறது. நமது நாகரீகம் மற்றும் வாழ்வில் ஜனநாயகம் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது. இந்தியாவின் ஜனநாயக பாரம்பரியத்தை வலுப்படுத்தும்போது முன்னோக்கி செல்வதற்கும் வலுவான அடித்தளத்தை அம்பேத்கர் அமைத்தார் என்று குறிப்பிட்டார். 

அறிவு, சுயமரியாதை மற்றும் பணிவு  ஆகியவற்றை தனது 3 மதிப்பிற்குரிய தெய்வங்களாக அம்பேத்கர் கருதினார் எனக் குறிப்பிட்ட பிரதமர்,  அவர் காட்டிய வழியில் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லும் பொறுப்பு நமது கல்வி முறைக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் உள்ளது என்று பேசினார். 

அம்பேத்கரின் கருத்துக்களை ஒவ்வொருவரிடமும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்திய அவர்,   ஜல் ஜீவன் திட்டம், இலவச வீடு, இலவச மின்சாரம், தொற்று சமயத்தில் உதவி போன்ற நடவடிக்கைகள்  மற்றும் பெண்கள் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகள் ஆகியவை அம்பேத்கரின் கனவை முன்னெடுத்துச் செல்வதாகவும் அவர் கூறினார்.

Advertisement:

Related posts

“காலா”, “அசுரன்” திரைப்படங்களில் நடித்த, நித்திஷ் வீரா கொரோனாவுக்கு பலி!

Vandhana

“தமிழர்களின் கலாச்சாரம், பண்பாட்டை பாதுகாக்க துணை நிற்பேன்” – ராகுல் காந்தி

Gayathri Venkatesan

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று பாதிப்பு!

Karthick