முக்கியச் செய்திகள் தமிழகம் Local body Election

திமுக நிர்வாகிகள் தற்காலிக நீக்கம்-பொதுச்செயலாளர் துரைமுருகன் அதிரடி அறிவிப்பு

திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக போட்டியிட்டவர்களை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பிப். 19ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்திருந்தார். இந்நிலையில், இதற்கான வேட்புமனுக்கள் தாக்கல், வேட்புமனுக்கள் மீதனான பரிசீலனை, இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு என பல கட்டங்கள் நிறைவடைந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தற்போது விறுவிறுப்பாக பரப்புரைகளை வேட்பாளர்கள் செய்துவருகின்றனர். இந்நிலையில், இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்த திமுக நிர்வாகிகள் தற்காலிகமாக நீக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருப்பூர், தருமபுரி, சேலம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், திமுக மற்றும் தோழமை கட்சி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்டவர்களை கட்சியினர் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தனியார் நிறுவனத்தில் சிபிஐ பறிமுதல் செய்த 103 கிலோ தங்கம் மாயம்: துறை ரீதியிலான விசாரணைக்கு சி.பி.ஐ உத்தரவு!

Saravana

விவசாயி உயிரிழந்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்!

Gayathri Venkatesan

“தளபதி 66”: வைரலாகி வரும் விஜயின் நியூ லுக்!

Halley Karthik