இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் 54 சீன செயலிகளை மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இந்தியாவில் பல செயலிகள் தடை செய்யப்பட்டிருக்கிறது. இதில் முக்கியமாக பலராலும் பயன்படுத்தப்பட்ட பப்ஜி, டிக் டாக் ஆகிய செயலிகளும் தடை செய்யப்பட்டது. இந்தியா மக்கள் வெகு நேரம் செலவிடும் செயலிகளாக பப்ஜியும், டிக் டாக்கும் இருந்த நிலையில், இதை தடை செய்ததும் நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தற்போது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் 54 செயலிகளை மத்திய அரசு தடை செய்துள்ளது. இந்த பட்டியலில் இருக்கும் 54 செயலிகளில் பெரும்பாலானவை ஏற்கனவே இந்திய அரசால் தடை செய்யப்பட்ட செயலிகள் ஆகும். இருப்பினும் இவை மறு வடிவம் செய்யப்பட்டு வேறு பெயரில் வெளிவந்தவை. இந்நிலையில் பாதுகாப்பு குறைப்பாடு காரணமாக இதனையும் மத்திய அரசு தடை செய்துள்ளது.
பாதுக்காப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதை கண்டறிந்து மத்திய அரசு தடை செய்த செய்லிகள் பின்வருமாறு,
- பியூட்டி கேமரா – ஸ்வீட் செல்பி (Beauty Camera-Sweet Selfie HD)
- பியூட்டி கேமரா – செல்ஃபி கேமரா (Beauty Camera – Selfie Camera)
- இக்வலைசர் & பேஸ் பூஸ்டர் (Equalizer & Bass Booster)
- கேம் கார்ட் சேல்ஸ் போர்ஸ் (CamCard for SalesForce)
- ஐசோலாண்ட் 2: ஆஷெஸ் ஆஃப் டைம் லைட் (Isoland 2: Ashes of Time Lite)
- விவா வீடியோ எடிட்டர் (Viva Video Editor)
- டென்செண்ட் சிரிவர் (Tencent Xriver)
- ஆன்ம்யோஜி செஸ் (Onmyoji Chess)
- ஆன்ம்யோஜி அரீனா (Onmyoji Arena)
- ஆப்லாக் (AppLock)
- டுவல் ஸ்பேஸ் லைட் (Dual Space Lite).
மத்திய அரசின் விவரங்களின் படி இதுவரை இந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ள 270 செயலிகளை இந்திய அரசு தடை செய்து உள்ளது. இதில் 90%க்கும் அதிகமானவை சீன செயலிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.