முக்கியச் செய்திகள் இந்தியா

மகாராஷ்டிராவில் தவிக்கும் மீனவர்கள்..விடுவிக்க கோரிக்கை..

மகாராஷ்டிராவில் கைது செய்யப்பட்டுள்ள தங்களை விடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கன்னியாகுமரி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறை பகுதியை சேர்ந்த ஜெகன் என்பவருக்கு சொந்தமான ஜெபி என்ற விசைப்படகில் பூத்துறை, இறையுமன் துறை பகுதியை சேர்ந்த 8 மீனவர்களும் அசாம் மாநிலத்தை சேர்ந்த 2 மீனவர்கள் என 10 மீனவர்கள் கடந்த மாதம் 29 ம் தேதி கொச்சியிலிருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடி தொழிலுக்கு சென்றனர். ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருக்கும்போது விசைபடகு பழுதானதால் இந்திய கடற்படையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

விரைந்து வந்த கடற்படையினர் மீனவர்கள் மற்றும் விசைப்படகை மீட்டு மகாராஷ்டிராவில் உள்ள ரெத்தினகிரி பகுதிக்கு அழைத்து சென்று விசைப்படகின் பழுதை சரிசெய்து திருப்பி அனுப்பியுள்ளனர். அப்போது, அனுமதியில்லாமல் வந்ததாக கூறி மகாராஷ்டிரா மீன்வளத்துறை அதிகாரிகள் விசைப்படகுடன் மீனவர்களை கைது செய்துள்ளனர்.

மேலும், படகுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும், மீன்களை ஏலம்விடப்போவதாகவும் தெரிவித்துள்ளதாக தமிழ்நாடு மீனவர்கள் வீடியோ மூலம் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் வேகமாக அதிகரிக்கும் கொரோனா

Web Editor

ரூ.2000 வழங்கும் கொரோனா திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

வந்தா பாப்போம்… சசிகலா குறித்து சூசகமாக பதில் சொன்ன ஓபிஎஸ்

EZHILARASAN D