முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

“சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெறாது” – எச். ராஜா

கருத்துக் கணிப்பில் மட்டும்தான் திமுக வெற்றி பெறும் என்றும், தேர்தலில் அந்த கட்சி வெற்றி பெறாது என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.

சென்னை மயிலாப்பூர் பகுதியில், ‘வெற்றிக்கொடி ஏந்தி வெல்வோம் தமிழகம்’ என்ற தலைப்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக பாஜக பொதுச்செயலாளர் கரு நாகராஜன், அக்கட்சியின் மூத்த தலைவர் எச். ராஜா, தமிழக தேர்தல் துணை பொறுப்பாளர் விகே சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது, பேசிய எச்.ராஜா, அர்ஜூன் பீரங்கியை ராணுவத்திற்கு அர்ப்பணிக்க தமிழகம் வந்த பிரதமர் மோடியை, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்டோர் எதிர்த்ததாகவும், இவர்கள் கருப்பு பலூன் விடும் பள்ளி பிள்ளைகள் என விமர்சனம் செய்தார்.

இந்த ஸ்கூல் பிள்ளைகளிடம் நிர்வாகம் சென்றால் மத்திய அரசு திட்டம் எதும் தமிழகத்திற்கு வராது எனவும் கூறினார். சட்டமன்றத் தேர்தலில் கருணாநிதி மட்டும் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு போக பயந்துகொண்டு ராஜினாமா செய்தவர் எனவும் விமர்ச்சித்தார். கருத்துக்கணிப்பில் திமுக வெற்றி பெறும் ஆனால் தேர்தலில் வெற்றி பெறாது எனவும் கூறினார்.

கேஸ் சிலிண்டர் விலையை ஏற்றியவர்கள் பொருளாதார புடலங்காயான மன்மோகன் சிங், மற்றும் எங்க ஊர் ப.சிதம்பரம் எனவும் காட்டமாக தெரிவித்தார். அந்நிகழ்ச்சியில் கோலப்போட்டியில் வெற்றி பெற்ற மகளிருக்கு கேஸ் அடுப்பு, மிக்சி, இண்டக்ஸன் ஸ்டவ், கவரிங் நகை செட் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.

Advertisement:
SHARE

Related posts

20 லட்சம் கணக்குகளை முடக்கிய வாட்ஸ்அப்

Halley karthi

டாஸ்மாக்கில் பெட்ரோல் குண்டு வீச்சு: ஒருவர் காயம்!

Gayathri Venkatesan

தமிழ்நாட்டில் புதிதாக 1,682 பேருக்கு கொரோனா பாதிப்பு

Saravana Kumar