ஓட்டுக்காகப் பணம் கொடுப்பவர்களுக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டாம் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று போடிநாயக்கனூர் அமமுக வேட்பாளர் முத்துச்சாமிக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
போடியநாக்கனூரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட டிடிவி தினகரன் பேசுகையில் ’இங்கு வருவது எனது சொந்த ஊருக்கு வருவது போல மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது .கடந்த 2001ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இதே தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஓ பன்னீர்செல்வமும் , திமுக சார்பில் போட்டியிடும் தங்கத் தமிழ்செல்வனும் தான் எனக்காக வேலை பார்த்தார்கள். ஆனால் இன்று இருவருமே எனக்கு எதிராகக் களத்தில் நிற்கிறார்கள் அவர்களுக்குச் சரியான பாடம் கற்பிக்க வேண்டும். ஓட்டுக்காகப் பணம் கொடுப்பவர்களுக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டாம். மக்களுக்குச் சேவை செய்ய, நாடு நலம் பெற ஓட்டுக்குப் பணம் வாங்கும் இந்த முறையை ஒழிப்போம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்பொழுதுதான் நாடு நன்றாக இருக்கும்.
ஓ பன்னீர்செல்வம், தங்கத்தமிழ் செல்வன் சொல்கிறார்கள் நான் எதிலும் அவசரப்படுகிறேன் என்று ஆனால் இப்போது சொல்கிறேன் நான் எப்போதுமே எதற்குமே அவசரப்பட்டது கிடையாது. எதையும் நிதானமாக பொறுமையாகக் கையாள்பவன் நான். எனது நடவடிக்கை அமைதியாக இருந்தாலும் எடுக்கப்படும் நடவடிக்கைகள் மிக வேகமாக இருக்கும்.’என்று அவர் கூறினார்.