லக்னோ அணிக்கு ரிஷப் பண்ட் நன்றி…!

டெல்லி அணிக்கு திரும்பியுள்ள ரிஷப் பண்ட் லக்னோ அணிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

டெல்லி அணியில் இருந்து கடந்த 2024 ஆண்டு விடுவிக்கப்பட்ட ரிஷப் பண்டை லக்னோ அணி 27 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

லக்னோ அணிக்கு 2025, 2026 ஆகிய ஆண்டுகளில் பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் செயல்பட்டார். ஆனால் கடந்த 2 ஐபிஎல் சீசனும் அவருக்கு சிறப்பாக அமையவில்லை. அதிலும் இந்த ஆண்டு ஐபிஎலில் லக்னோ அணி 14 ஆட்டங்களில் 4 வெற்றிகளும் 10 தோல்விகளும் பெற்றதால் புள்ளி பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது.

இதனிடையே ரிஷப் பண்ட் மீண்டும் டெல்லி அணிக்கு திரும்பியுள்ளார். டெல்லி மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையே நடைபெற்ற வீரர்கள் பரிமாற்றத்தில் டெல்லி அணிக்கு ரிஷப் பண்ட் ரூ. 15 கோடிக்கு மாற்றப்பட்டார். பண்டிற்கு பதிலாக குல்தீப் யாதவை லக்னோ அணி ரூ. 13.5 கோடிக்கு பெற்றுள்ளது.

இந்த நிலையில் ரிஷப் பண்ட் லக்னோ அணிக்கு நன்றி தெரிவித்துள்ளார். ரிஷப் பண்டிற்காக லக்னோ அணி இன்ஸ்டாவில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு “சுக்ரியா ரிஷப்” என்றும் “அனைத்து நினைவுகளுக்கும் நன்றி, ரிஷப்” எனவும் தெரிவித்து இருந்தது.

ரிஷப் பண்ட் இந்த போஸ்டரை தனது இன்ஸ்டா ஸ்டோரியாக பதிவிட்டு “நன்றி டீம்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.