நேர்மையான ஆட்சியை வழங்குவதே முதலமைச்சரின் தொலை நோக்கு சிந்தனை – அமைச்சர் செங்கோட்டையன்…!

முதலமைச்சரின் தொலை நோக்கு சிந்தனை என்பது நேர்மையான ஆட்சியை வழங்குவதே ஆகும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திமுகவை மக்கள் ஏற்காததால் தான், அக்கட்சியின் தலைவரே தேர்தலில் தோற்கடிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் பேரவைக்கு உள்ளே இருந்து கேள்வி கேட்டிருந்தால், முதலமைச்சர் பதில் சொல்லியிருப்பார்.

நயினார் நாகேந்திரனை பொறுத்தவரை அவர் காமெடி பேசுகின்றவர். அவர் வேண்டுமென்றே எங்களை தக்கி கொண்டிருக்கிறார். திமுக தான் பிஜேபியை தாக்கி கொண்டிருக்கிறது.

ஆட்சிக்கு வந்த பிறகு பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்டோரை சந்திப்பது இயல்பானது. முதலமைச்சரின் தொலை நோக்கு சிந்தனை என்பது நேர்மையான ஆட்சியை வழங்குவதே ஆகும். திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.