முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

திண்டுக்கல் ஜல்லிக்கட்டு: 2 மணி நேரத்திற்கு முன்பே நிறுத்தப்பட்டது ஏன்?

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கொசவப்பட்டியில் பொங்கல் பண்டிகையை ஒட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகையையொட்டி தை மாதம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகளும் அந்தந்த ஊர்களுக்கு ஏற்றவாறு நடத்தப்படும். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கொசவப்பட்டியில் உள்ள புனித உத்திரிய மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று ஜல்லிகட்டு போட்டி நடைபெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த போட்டியில் திண்டுக்கல், மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 600 காளைகளும், 400 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். போட்டியில் பங்கேற்க வந்த அனைத்து காளைகளும் கால்நடை மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்பட்டு வாடிவாசலுக்கு அனுப்பப்பட்டது. அதேபோன்று மாடுபுடி வீரர்களும் மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியை திண்டுக்கல் மாவட்ட எஸ்பி பாஸ்கரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். போட்டியின் முதல் காளையாக, கோவில் காளை அவிழ்த்து விட்டப்பட்டது.

அதனை தொடர்ந்து போட்டியில் கலந்துகொள்ள வந்த மற்ற காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. வாடிவாசலில் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் ஒருபுறம் அடக்க முயல, இன்னொரு புறம் நீண்டநேரம் காளைகளும் களத்தில் நின்று விளையாடின. இந்த போட்டியில் வெற்றிபெற்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது.

மேலும் ஜல்லிக்கட்டு போட்டியின் போது மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 16க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில், அவர்களுக்கு அந்த இடத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மருத்துவ குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுதவிர பெரிய அளவில் காயமடைந்த சிலர் மேல் சிகிச்சைக்காகவும் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் வாடிவாசலில் காளை அவிழ்க்கும் முன்பு காத்திருக்கும் நீண்ட வரிசையில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாகவும், விதிமுறைகளை முறையாக பின்பற்றாததன் காரணமாகவும் நான்கு மணிக்கு நிறைவடைய இருந்த ஜல்லிக்கட்டு போட்டி, திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் அவர்களால் இரண்டு மணிக்கே நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனையடுத்து சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை தவிர்க்கும் விதமாக ஜல்லிக்கட்டு போட்டி இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே நிறுத்தப்பட்டதாக காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. தென் மாவட்டங்களில் அதிக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் மாவட்டமான திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே காவல்துறை கண்காணிப்பாளரால் நிறுத்தப்பட்ட சம்பவம் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கிரிக்கெட்டில் புதிய விதிமுறை ; அக்டோபர் முதல் அமல்

EZHILARASAN D

“சமூக நீதியின் ஹீரோ பிரதமர் மோடி”

G SaravanaKumar

முதல்வரின் தனிச்செயலாளர்களாக 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!

Halley Karthik