மதுரை, திருச்சி, தஞ்சை அரசு மருத்துவமனைகளில் வலி நிவாரணி சிறப்பு மையம் அமைக்க கோரிய வழக்கில், சுகாதாரத்துறை செயலாளர், மருத்துவக் கல்வியியல் துறை இயக்குனர் ஆகியோர் பதிலளிக்க மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
புற்றுநோய், HIV மற்றும் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கடைசி நாட்களில் அதிக வலியை தாங்க முடியாமல் இறக்கும் சூழ்நிலை உள்ளதால், அதனை தடுக்கும் வகையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, மதுரை தோப்பூர் அரசு நுரையீரல் மருத்துவமணை, பாலரங்காபுரம் அரசு மருத்துவமனை, திருச்சி அரசு மருத்துவமனை, தஞ்சாவூர் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் வலி நிவாரணி சிறப்பு மையம் அமைக்க கோரி மதுரை நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த சகா என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையடுத்து, இந்த மனு மீதான விசாரணை, இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில், நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் புற்றுநோய், எச்.ஐ.வி., நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வலி நிவாரணி மையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
மனுதாரரின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் , வழக்கு குறித்து சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலர், மருத்துவக் கல்வியல் துறை இயக்குனர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.