நீட் தாக்கம் குறித்து ஆய்வு செய்வதற்கு குழு அமைக்க உச்சநீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதா என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து, பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீட் தேர்வின் தாக்கம் குறித்த ஆய்வுக் குழு அமைக்க உச்சநீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதா என தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கில் மத்திய- மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.







